இரு நாயகிகள்!
ரஜினி -சிபி சக்கரவர்த்தி படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பின் முந்தைய பணிகளில் பிஸியாக இருக்கிறார் சிபி சக்ரவர்த்தி. அதன் ஒரு பகுதியாக நடிகர்களை தேர்வு செய்யும் அவர், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு நடிகைகளை அணுகியுள்ளார். ஒருவர் பிரியங்கா மோகன், மற்றொருவர் பூஜா ஹெக்டே. இதில் பிரியங்கா மோகன், சிபி சக்கரவர்த்தியின் "டான்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டே ரஜினியோடு "கூலி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
மீண்டும் நாயகன்!
"பராசக்தி' படத்தை மிகவும் எதிர்பார்த்த சுதா கொங்கரா, படம் எதிர்பார்த்த அளவு போகாததால் சற்று கலக்கத்தில் இருக்கிறார். இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக துருவ்விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அது "பராசக்தி' பட வெளியீடு முன்பாகவே கைவிடப்பட்டது. அடுத்ததாக தெலுங்கு நடிகர் நானியை வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்தார். அதுவும் அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. இதனால் தற்போது "பராசக்தி' படத்தில் நடித்த ரவி மோகனையே மீண்டும் அணுக, அவரும் சுதா கொங்கராவுக்கு ஓ.கே. சொல்லியுள்ளார்.
கிரேஸ் ஹேப்பி!
32 வருடங்களுக்கு பிறகு அடூர் கோபாலகிருஷ்ணன் -மம்மூட்டி இணைந்துள்ள படம் "பாதயாத்ரா.' இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் நாயகியாக முதலில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது, ஆனால் தற்போது "பறந்து போ' மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான கிரேஸ் ஆண்டனியை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. நயன்தாரா பட வாய்ப்பு தனக்கு வந்ததாலும், பிரபல நடிகர் -இயக்குநர் கூட்டணி இணையும் படத்தில் நடிக்கவுள்ளதாலும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் ஒவ்வொரு காட்சியிலும் நடித்து வருகிறார் கிரேஸ் ஆண்டனி.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/tt1-2026-01-29-17-13-22.jpg)
சூர்யா டிக்!
சூர்யா தற்போது தனது 49ஆவது படத்தை கமிட் செய்துள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். அதனைத் தொடர்ந்து தனது திரை வாழ்க்கையின் முக்கிய படமான 50வது படத்தை பெரிய இயக்குநருடன் சேர்ந்து, தனது ரசிகர் களுக்கு தீனி போடும் வகையில் நடிக்க வேண்டுமென ஒரு கதையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். அதேசமயம் விமர்சன ரீதியாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் கதைக்காகவும் எதிர்பார்த் திருந்தார். இதற்காக பல்வேறு முன்னணி இயக்குநர்களை அணுகிய அவர், இறுதியாக மாரி செல்வராஜை ஓ.கே. செய்துள்ளார். அவர் கூறிய கதையில் இம்ப்ரஸான சூர்யா முழுக் கதையையும் தனது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு எழுதி முடிக்கச் சொல்லியுள்ளார்.
கன்னட கார்த்திகேயன்!
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் கலந்துகட்டி ஹீரோவாக வரவேண்டுமென மற்ற மொழி இயக்குநர்களுக்கு தற்போது முன்னுரிமை கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலிவுட் இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்க, அவருடன் ஒரு சந்திப்பு மேற்கொண்டார். அது இன்னும் அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை. இதனால் தற்போது சாண்டல்வுட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இயக்குநர் சந்தோஷ் ஆனந்த்ராமுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒன்லைனை டிக் செய்துள்ளார். இப்படத்தை கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. அதனால் விரைவில் சிவகார்த்திகேயனை கன்னட சினிமாவில் பார்க்கலாம் என்கிறது திரை வட்டாரம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/tt-2026-01-29-17-13-10.jpg)